மோடி நினைத்தால் ராஜபக்சேவை நீக்கலாம்: இளங்கோவன்

தினமலர் செய்தி : சென்னை: மோடி நினைத்தால் ராஜபக்சே அரசை நீக்கி விட்டு, தமிழர் நலனில் அக்கறை உள்ள அரசை அமைக்கலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான ஆட்சியை அகற்றி விட்டு தமிழர் நலனில் அக்கறை கொண்ட ஆட்சியை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபக்சே அரசை அகற்றுவது எப்படி என மோடிக்கு நிச்சயம் தெரியும். இலங்கையில் ஜனநாயகம் அழிந்து விட்டது. எனவே அங்கு தமிழர் ஆதரவு அரசு அமைய வேண்டும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

Comments