தினமலர் செய்தி : சென்னை: சென்னையிலிருந்து திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலியிலிருந்து
சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே
அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த
ரயில்களுக்கு 4,6 மற்றும் 8ம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம் எனவும்,
நெல்லையிலிருந்து 13 மற்றும் 20ம் தேதிகளில் இரவு 9.15 மணியளவில் சிறப்பு
ரயில்கள் புறப்படும் என கூறியுள்ளது. மேலும் சென்னை நெல்லை இடையே சிறப்பு
பிரீமயம் ரயில்களும் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
ரயில்களில் பயணிக்க 14 மற்றும் 21ம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம்.
சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் வரும் 24ம் தேதி இரவு 10.45
மணிக்கு கிளம்பும். சிறப்பு ரயிலில் பயணிக்க 4ம் தேதி முன்பதிவு
செய்யலாம். நெல்லையிலிருந்து சென்னைக்கு பிரிமீயம் சூப்பர் பாஸ்ட் ரயில்
வரும் 23ம் தேதி இயக்கப்படும் எனவும், இந்த ரயிலில் பயணிக்க 8ம் தேதி
முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments