டில்லி பரபரப்பு; கொள்ளையர் அட்டகாசம் ; துப்பாக்கியால் சுட்டு வங்கி பணம் கொள்ளை

தினமலர் செய்தி : புதுடில்லி: வடக்கு டில்லியில் இன்று காலையில் வங்கிப்பணம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரச்சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டில்லிக்குட்பட்ட கம்லா நகரில் தனியார் வங்கிப்பணம் ஒரு வேனில் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருந்தது.
இந்நேரத்தில் வந்த துப்பாக்கியில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த வேனை வழிமறித்தனர். வேனில் பாதுகாப்புக்கு வந்த வீரரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் செக்ரியூட்டி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். வேனில் கொண்டு வரப்பட்ட பணப்பெட்டியை கொள்ளையர்கள் தூக்கி சென்றனர்.

இதனையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். வங்கி பணத்தை கொள்ளை அடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். டில்லியில் அனைத்து சாலைகளிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோரிடம் கடும் சோதனை நடத்தப்படுகிறது.

ஏ.டி.எம்., மையத்தில் பணம் நிரப்பும் வகைக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

டில்லியில் பட்டப்பகலில் நடந்த சம்பவம பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments