வைகை அணையை தூர் வார ரூ.8 கோடியில் திட்டம்: 2015 ஏப்ரலில் பணி துவக்கம்

தினமலர் செய்தி : மதுரை: வைகை அணையில் உள்ள சகதியை அகற்ற ரூ.8 கோடியில் திட்டம் தயாராகிறது. இப்பணியை 2015 ஏப்ரலில் துவக்க பொதுப்பணித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது: வைகை அணையில் 71 அடி வரை நீரை சேமிக்கலாம்.
அணையில் 22 அடி வரை சகதி இருப்பதால் முழுகொள்ளளவுக்கு நீரை சேமிக்க இயலவில்லை. உலகவங்கி நீர்வள, நிலவள(ஐமாம்) திட்டத்தின் கீழ், அணையில் சகதியை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக நீர்பரப்பு மேலாண்மை புவியியலார் அணையில் பல்வேறு ஆய்வுகளை செய்தனர். அணையில் நீர் இருந்தாலும் சகதியை அகற்றும் தொழில்நுட்பத்தில் தூர் வாரப்படும். இதற்கான திட்டமதிப்புகளை தயாரிக்க, இந்தியன் நீரியல் கல்வி துணை இயக்குனர் கருப்பையா, இணை இயக்குனர் தமிழரசன், உதவிசெயற்பொறியாளர் ரமேஷ் நவ., 14 தேதி அணையை ஆய்வு செய்தனர். நவ., 19 தேதி அன்று இதே குழுவினர் அணை தூர்வாரும் பணிக்கு திட்டமதிப்பீட்டை இறுதி செய்கின்றனர். அன்றையதினம் சாத்தையாறு வாய்க்கால்கள், சிறுமலை பேசினில் உள்ள வாய்க்கால்களை தூர் வாரும் பணி குறித்து இக்குழுவினர் 2 ம் கட்ட ஆய்வு நடத்துகின்றனர். திட்டமதிப்பீடு இறுதியான பின், டெண்டர் விடப்பட்டு பணி துவங்கும்.

Comments