தினமலர் செய்தி : 'தமிழ் சமுதாயத்தை மேம்படுத்த, 5,000 பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். சென்னையில்
நேற்று நடந்த, முரசொலி சிங்காரம் இல்லத் திருமண விழாவில் கருணாநிதி
பேசியதாவது: சமுதாய புரட்சியை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்; அந்த
புரட்சிக்கு மக்களை தயார்படுத்த வேண்டும்.
தி.மு.க.,வை சமுதாய ரீதியில்
வளர்க்க வேண்டும். தி.மு.க., கூட்டம் என்றால், தி.மு.க., பிரசாரம் என்றால்,
அது ஏதோ அரசாங்கத்தை மாற்றுகின்ற கூட்டம் என்ற நினைவோடு மட்டும் அணுகக்
கூடாது. சமுதாயத்தை அடியோடு மாற்றுகிற, சமுதாய சூழலை உருவாக்குகிற,
மானமுள்ள சமுதாயத்தை ஏற்படுத்துகிற உணர்வோடு தான், தி.மு.க., என்ற பெயரை
பயன்படுத்த வேண்டும். இந்த சமுதாயத்திற்கு வெற்றி தேட, ஓராண்டில், 5,000
கூட்டங்களாவது, தி.மு.க., சார்பில் நடத்த வேண்டும். இவ்வாறு, கருணாநிதி
பேசினார்.
Comments