தினமலர் செய்தி : வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள,
4,000 கி.மீ., தூர சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்புப் பணிகள்
பாதிக்கப்பட்டு விட்டன; மேலும், 1,000 கி.மீ., சாலைகளும்
பாதிப்படைந்துள்ளதால், மழை முற்றிலும் நின்ற பிறகே, சீரமைப்புப் பணிகள்
துவங்கப்படும் என, அரசு அறிவித்து விட்டது.
நெடுஞ்சாலை துறை:
வடகிழக்கு
பருவ மழையால், சாலைகளில் ஏற்படும் பாதிப்பை கண்காணிக்க, நெடுஞ்சாலைத்
துறையில் அவசர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 40 கோட்ட
அலுவலகங்களிலும் அவசர கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. இங்கு, மூன்று,
'ஷிப்ட்' அடிப்படையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 24 மணி நேரமும்
பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருந்து அனுப்பப்படும் தகவல்கள், சென்னையில்
உள்ள, தலைமை அவசர கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைக்கப்படுகிறது.அதன்படி,
ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழையால், மாநிலம் முழுவதும், 4,000 கி.மீ.,
தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கொடை ரோடு,
தேனி உள்ளிட்ட மலைப்பகுதி சாலைகளிலும், நிலச்சரிவு, தடுப்பு சுவர் விரிசல்
ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, அரசு தரப்பில், 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் ஒப்புதலுடன், வருவாய் துறையின் நிதியுதவி பெற்று, இச்சாலைகளை செப்பனிடும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கினர்.சேதமான சாலைகள், அவற்றில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், கட்டட இடிபாடுகள் மற்றும் சிறிய கூழாங்கற்கள் கொண்டு நிரப்பப்பட்டன. எனினும், மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சாலைகளை செப்பனிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளிலும், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகளை சீரமைக்கவும், விரிவுபடுத்தவும், அரசு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கிஉள்ளது. 'நபார்டு' வங்கி திட்டத்தின் மூலமும் பல சாலை மேம்பாட்டுப்பணிகள் நடக்க உள்ளன. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது. வடகிழக்கு பருவமழையால், ஏற்கனவே, 4,000 கி.மீ., தூரத்திற்கு சாலைகள் சேதமடைந்தது கண்டறியப்பட்டது. தற்போது, மேலும், 1,000 கி.மீ., தூரத்திற்கு சாலைகள் சேதம் அடைந்துள்ள தகவல் கிடைத்துள்ளது.

தார் கலவை பூசலாமா?
மழை நேரத்தில், சாலையில் உருவான பள்ளங்களில் தார் கலவை பூச முடியாது. எனவே, கட்டட இடிபாடுகளை கொண்டு பள்ளங்கள் நிரப்பப்படுகின்றன.ஒட்டுப் போடப்பட்ட சாலைகளில், கனரக வாகனங்களும் பயணிப்பதால், கட்டட இடிபாடுகள் கரைந்து, மீண்டும் பள்ளங்கள் உருவாகி வருகின்றன.மழை நின்ற பிறகே, இந்த சாலைகள் முற்றிலுமாக சீரமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Comments