ஜம்மு-காஷ்மீர் ; ஓட்டுப்பதிவு துவக்கம் ; 4 இடங்களில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

தினமலர் செய்தி : ஜம்மு: ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீரிர் சட்டசபை முதல்கட்ட தேர்தல் இன்று காலை துவங்கியது. காலை முதல் பலரும் ஆர்வமாக ஓட்டளிப்பதை காண முடிந்தது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என பல பிரிவினைவாதிகள் அமைப்பினர், பயங்கரவாதிகள் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மக்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
இன்று மாலை 5 மணி நிலவரப்படி 70 சதவீத ஓட்டுக்கள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஜம்மு- காஷ்மீர் பல்வாமா என்ற பகுதியில் 4 இடங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை கண்டறிந்து போலீசார் அப்புறப்படுத்தினர். பண்டிபுரோ பகுதியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடி அருகே பெரும் வெடிகுண்டு வெடித்தது. இதில், யாருக்கும் காயமில்லை. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் எதிர்ப்பாளர்கள் சில இடங்களில் கல்வீச்சில் ஈடுபட்டனர். மொத்தம் 87 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில், 15 தொகுதிகளிலும், 81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட்டில் 13 தொகுதிகளிலும் 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு : தனது டுவிட்டரில் , இளைய சமுதாயத்தினர் தங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய வேண்டும். மேலும் பெருவாரியான ஓட்டுக்கள் பதிவை ஏற்படுத்த வேண்டும். இதுவே மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
இது எனக்கு முதல் ஓட்டு : ஜம்முவில் ஓட்ளித்த ஒரு இளம் பெண் பரக்கத் கூறுகையில், நான் முதன் முதலில் இன்று தான் ஓட்ளித்துள்ளேன். இது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டை வளமாக்கும் நபர்கள் யாரோ அவர்களை மனதில் வைத்து ஓட்டளித்துள்ளேன் என்றார் புன்னகையுடன்.

Comments