பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையில் நீர்க்கசிவு உள்ளதாகக் கூறியதன் அடிப்படையில், தமிழக, கேரள உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்குப்பின் குழுத் தலைவர் நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையில் இனிமேல் எப்போது வேண்டுமானாலும் 142 அடி நீர்
தேக்கலாம். இதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அணையை ஒட்டியுள்ள பேபி அணையில்
நீர்க்கசிவு இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது.இருந்த போதிலும் கேரளா
கூறும் புகாரைத் தொடர்ந்து பேபி அணையைப் பலப்படுத்தியபின் அணையின்
நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் எவ்வித பிரச்னையும் இல்லை.
அணைப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினரை நியமிப்பது குறித்து எங்கள்
குழு தலையிடாது. மத்திய அரசும் தமிழக அரசும் சேர்ந்து முடிவெடுத்து
நியமிக்கலாம் என்றார்.
பேபி அணையில் பெரியாறு கண்காணிப்புக்குழு ஆய்வு:
பேபி அணையில் நீர்க்கசிவு இருப்பதாகக் கேரள அரசியல்வாதிகள் கூறிய பகுதியை கண்காணிப்புக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கலாம் என கடந்த மே 7ல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து அணையை பராமரிக்க, 142 அடி நீர் தேக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய நீர்ப்பாசன முதன்மை பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் தலைமையில் மூன்றுபேர் அடங்கிய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது.இக்குழுவில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் சாய்குமார், கேரளா சார்பில் நீர்ப்பாசனத்துறை தலைமைச் செயலர் குரியன் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு கடந்த ஜூலை 17ல துவங்கி 5 முறை ஆய்வை நடத்தியுள்ளது. தற்போது ஆறாவது முறையாக நேற்று ஆய்வு மேற்கொண்டது.பெரியாறு அணையில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியபின் கேரள அரசியல்வாதிகள் மீண்டும் புகார் கூறத்துவங்கினர். அணையை ஒட்டியுள்ள ஷட்டரில் பழுது இருப்பதாகக்கூறினர். ஷட்டர்களை பார்வையிட்ட கண்காணிப்பு குழுவினர் 'பிரச்னை ஏதுமில்லை' என்றனர். அணைப்பகுதிக்கு அனுமதியின்றி சென்ற பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜூ மோள், பேபி அணையில் 'நீர்க்கசிவு' ஏற்படுவதாக கூறினார். இந்த புகார் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது.

மழைநீர் கசிவு:
எனவே
நாதன் குழு நேற்று பேபி அணைக்கு சென்றது. நீர் கசிவு இருப்பதாக கூறிய
பகுதியை குழுத் தலைவரிடம், கேரள உறுப்பினர் காட்டினார். அருகில் இருந்த
காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணியன், ''மழைநீர் கசிவதைப் போய்,
நீர்க்கசிவு என கூறுகிறீர்களே'' என கூறினார். குழுவின் தலைவர் நாதன்
இருதரப்பினர் கூறுவதையும் கேட்டுக் கொண்டார். 'பேபி அணையில் நீர்க்கசிவு
இல்லை' என்றார், தமிழக தரப்பு உறுப்பினர் சாய்குமார். பின், மாலையில்
ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பெரியாறு அணை 'டூரிஸ்ட் ஸ்பாட்' இல்லை:
பெரியாறு
அணைப்பகுதிக்கு கேரள எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் என அடிக்கடி
அனுமதியின்றி வந்து செல்வதாக அதிகாரிகள், தமிழக பொதுப்பணித்துறை முதன்மை
செயலர் சாய்குமாரிடம் புகார் கூறினர்.
அதற்கு பதிலளித்த அவர், ''பெரியாறு அணை 'டூரிஸ்ட் ஸ்பாட்' கிடையாது. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியின்றி, கேரள எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் அணைப்பகுதிக்கு வர அனுமதிக்கக்கூடாது. தேனி கலெக்டர் கூட அனுமதி பெற்றே சென்றார். படகு நிறுத்தப்பகுதியில் இருந்து அணைப்பகுதி செல்லும் இடத்தில் புதியதாக 'கேட்' அமைத்து பூட்டி வைக்க வேண்டும்.அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே திறந்து விட வேண்டும். துணைக்குழுவில் இடம் பெற்றவரும், தலைவருடன் வந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் ” என கண்டிப்புடன் கூறினார்.

Comments