மணிமுத்தாறு அணை 100 அடியை எட்டியது

தினமலர் செய்தி : திருநெல்வேலி: மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இரவு 100 அடியை எட்டியது. திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பெய்துவருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. கடனாநதி, கருப்பாநதி, ராமநதி,குண்டாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பிவிட்டன. 143 அடி உச்சஅளவை கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 138.45 அடியாக உயர்ந்தது. அணைக்கு ஆயிரத்து 222 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 150.65 அடியாக உயர்ந்தது. 118 அடி உச்சஅளவை கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் காலையில் 99.35 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 662 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இரவு 7 மணியளவில் மணிமுத்தாறு அணை 100 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

Comments