திருடிய வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

கோவை : திருடச் சென்ற வீட்டில், குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தவரை, தட்டியெழுப்பி, போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றாலம் பயணம் : கோவை, உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் நிர்மல் ராஜ்குமார், 33; ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனையாளர்.
ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, குடும்பத்துடன் குற்றாலம் சென்று, நேற்று அதிகாலை திரும்பினர். வீட்டில், இரண்டாவது மாடியில் படுக்கையறை திறந்து கிடந்தது. 'டிவி'யில், படம் ஓடிக் கொண்டிருந்தது. படுக்கையில், மர்ம நபர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட குடும்பத்தினர், அதிர்ச்சி அடைந்தனர். அறைக்கதவை பூட்டிய நிர்மல்குமார், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பீளமேடு போலீசார், தூங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பினர். திடுக்கிட்டு எழுந்த ஆசாமி, போலீசாரைக் கண்டு தப்பியோட முயற்சித்தார். அவரை மடக்கிப் பிடித்தனர்.

போலீசார் கூறியதாவது: வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து, திருட வந்த ஆசாமி, குடிபோதையில் இருந்து உள்ளார். 'டிவி' பார்த்தார் பொருட்களை திருடி மூட்டைக்கட்டி வெளியே சென்ற போது, மழை பெய்துள்ளது. மழை நின்றபின், சாவகாசமாக செல்லலாம் என, நினைத்து, திருடிய பொருட்கள் நிரம்பிய பையை, வீட்டின் ஓரமாக வைத்துவிட்டு, கட்டிலில் படுத்தபடி, 'டிவி' பார்த்திருக்கிறார். போதையில், அயர்ந்து தூங்கி விட்டதால் ாட்டிக்கொண்டார். பிடிபட்டவர் பெயர் பென்னுமுத்து, ??. ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

Comments