ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டது; எம்.எல்.ஏ., பதவியும் பறிபோனது. இதனால், அவர் வெற்றி பெற்ற, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருக்கிறது.


அதனால், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தொகுதி காலியாக உள்ளதாக, சபாநாயகர் அறிவித்த, ஆறு மாதங்களுக்குள், அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, இதுவரை முறையான தகவல் எதுவும் சென்று சேரவில்லை என, தெரிகிறது.

ஆனாலும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொடர்பான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. அடுத்தாண்டு, ஜனவரியில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகளின் ஆட்சிக் காலம் முடிகிறது. அதனால், ஜனவரிக்கு முன், அங்கு தேர்தல் நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.இந்த தேர்தலுடன், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments