மொபைல் டவர் கதிர்வீச்சு ஆய்வு நடத்த அரசு திட்டம்

புதுடில்லி,: 'மொபைல் போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது' என, மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு துறை அறிவித்து உள்ளது.இதுகுறித்து, அந்த துறை வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:பொதுமக்களிடம் இருந்து, தொடர்ச்சியாக கோரிக்கை வருவதை அடுத்து, மொபைல் போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காரக்பூர், சென்னை ஐ.ஐ.டி., ஆகியவற்றுடன் இணைந்து, இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான பட்ஜெட் குறித்து, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் அறிவித்தன.

Comments