மும்பை: கறுப்பு பணம் வைத்துள்ளவர்களுக்கு திடீர் நெருக்கடி தந்துள்ளது
சுவிஸ் வங்கி.நம் நாட்டு அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள்
உள்ளிட்ட பல தரப்பினரும் வரி ஏய்ப்பு செய்து, சுவிஸ் வங்கிகள் உள்ளிட்ட
வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் கறுப்பு பணத்தை குவித்துள்ளதாக
புகார் எழுந்ததை அடுத்து.
இந்த கறுப்பு பணத்தை இங்கு கொண்டு வந்து சேர்க்க,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை
மேற்கொண்டிருக்கிறது.காங்கிரஸ் சாடல்:கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா முடுக்கி விட்டுள்ள நிலையில், ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிரச்சினையில் சிக்காமல் தவிர்ப்பதற்காக சுவிஸ் வங்கிகள், கறுப்பு பண முதலைகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
4 கறுப்பு பண முதலைகள்:அதாவது, சுவிஸ் வங்கிகளில் பெருமளவுக்கு கணக்கில் காட்டாத கறுப்பு பணத்தை குவித்துள்ள 4 கறுப்பு பண முதலைகளை அந்த வங்கிகள் தொடர்பு கொண்டுள்ளன. இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த வங்கிகளில் ரகசிய கணக்குகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர்-31 கெடு:இந்த 4 பேரில் 3 பேர் மும்பையை சேர்ந்தவர்கள், ஒருவர் டில்லியை சேர்ந்தவர் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. டிசம்பர் 31-ந் தேதிக்குள் இவர்கள் தங்களது கறுப்பு பணத்தை வங்கியில் இருந்து திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என கெடு விதித்துள்ளதாம்.
இது தொடர்பாக சுவிஸ் வங்கிகளின் பொதுமக்கள் தொடர்பு மேலாளர்கள், அந்த நபர்களை தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாகவும், அவர்கள் அந்த டெபாசிட்தாரர்களை கணக்கை முடித்துக்கொண்டு, பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 4 பேரில் ஒருவரை வரும் 30-ந் தேதிக்குள் கணக்கை முடித்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இன்னொரு வாடிக்கையாளரை, தங்கள் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணம் தொடர்பாக முறையாக வரி செலுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை அளிக்குமாறு சுவிஸ் வங்கி கேட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
Comments