ஜெ., ஜாமின் கிடைத்தது

புதுடில்லி: கடந்த 20 நாட்களாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெ., சிறைவாசம் முடிகிறது. இவர் மீதான சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பும், தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுவதுடன், இவருக்கு ஜாமினும் வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கொண்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது.



ஜெயலலிதா சார்பில், மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனும், சசிகலா சார்பில், சுஷில்குமாரும், சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில், கே.டி.எஸ்.துளசியும் ஆஜராகினர் .ஜெயலலிதாவின் ஜாமின் மனு, உச்ச நீதிமன்றத்தின், தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வின் முன் விசாரிக்கப்பட்டது.

Comments