இன்ச்சான்: ஆசிய விளையாட்டு கபடியில் இந்திய பெண்கள் அணி, தொடர்ந்து
இரண்டாவது முறையாக தங்கம் வென்று அசத்தியது. இன்றுடன் இந்தியா 10 தங்கம்
பெற்று ஆசிய கோப்பை பதக்கப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேற்றம்
பெற்றுள்ளது. தென் கொரியாவின் இன்ச்சான் நகரில் 17வது ஆசிய விளையாட்டு
நடக்கிறது.
இதன் பெண்கள் கபடி பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.வழக்கம் போல இந்திய வீராங்கனைகள் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். ஈரான் அணியினரும் சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்தனர். இருப்பினும், முதல் பாதி முடிவில் 15-10 என, இந்திய அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனைகள் ஜொலித்தனர்.
முடிவில், இந்திய பெண்கள் அணி 31-21 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. கடந்த 2010 ஆசிய விளையாட்டினை தொடர்ந்து இரண்டாவது முறையாக, இந்திய பெண்கள் கபடி அணி, தங்கம் வென்றது.
Comments