இந்தியாவில் உள்ள பலர், கறுப்பு பணத்தை சுவிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர்.
சுவிஸ் ஒப்புதல்:
சுவிஸ்
வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும்
என இந்திய அரசு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு கோரிக்கை வைத்தது. முதலில்
இதற்கு தயங்கிய அந்நாடு, பின்னர், அந்நாட்டின் விதிமுறைக்குட்பட்டு
தகவல்களை தர ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சுவிஸ் வங்கிகளில் பணம்
பதுக்கி வைத்துள்ளவர்கள் குறித்த விவரங்கள் பரிமாறப்பட்டன. மற்ற
நாடுகளிலும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
600 பேர் சிக்கினர்:
வௌிநாட்டில் கறுப்பு பணத்தை போட்டு வைத்திருப்போர் குறித்த விசாரணையில்,
முதற்கட்டமாக 600 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மத்திய பொருளாதார
புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையின் மூலம் இவர்கள் சிக்கி உள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் வௌிநாட்டில் டெபாசிட் செய்துள்ள தொகை குறித்து விசாரணை
துவக்கப்பட்டுள்ளது.
ஜெட்லி அறிவிப்பு:
வௌிநாட்டு
வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு வரும் நடவடிக்கைகள்
துவங்கிவிட்டதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த சில மாதங்களுக்கு முன்
கூறினார். அப்போது, 'இது விஷயமாக சுவிஸ் நாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு
வருகிறோம். சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு எந்த அளவிற்கு நடவடிக்கை எடுக்க
முடியுமோ, அந்த அளவிற்கு எடுக்கப்படும்,' என்றார்.
அதிகாரிகள் குழு செல்கிறது:
கறுப்பு பணத்தை மீட்கும் பணியில் அடுத்த கட்டமாக, சுவிஸ் வங்கியில்
கறுப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் மட்ட வரி மற்றும்
வருவாய்துறை அதிகாரிகள் சுவிட்சர்லாந்து செல்கிறார்கள். வருவாய் செயலர்
ஷக்தி கந்தா தாஸ் மற்றும் சேர்மன் சவுத்ரி தலைமையில் நிதியமைச்சகத்தின் இரு
அதிகாரிகள் அங்கு சென்று, இந்தியர்களின் கறுப்புபணம் தொடர்பாக உள்ள ரகசிய
கணக்குகள் குறித்து ஆய்வு செய்வார்கள் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments