அ.தி.மு.,க., தொண்டர்கள் சோகம்

சென்னை: ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணை பெங்களூரு ஐகோர்ட்டில் நடந்தது. இந்த விசாரணையின் போது, அரசு தரப்பு வக்கில் பவானிசிங், ஜெயலலிதாவை ஜாமினில் வெளியில் விடுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இந்த தகவலின் அடிப்படையில், ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அ.தி.மு.க, தொண்டர்கள் உற்சாகம் அடைந்து, பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், ஜெ., உள்ளிட்ட நால்வரின் ஜாமின் மனு மீது விசாரணை முடிந்த நிலையில், ஜாமின் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி சந்திரசேகரா உத்தரவிட்டார். இந்த தகவல் கிடைத்ததும் அ.தி.மு.க,,வினர் உற்சாகம் இழந்தனர்.

Comments