அதைக்கேட்டு என்ன பதில் கொடுப்பது என்று யோசிக்கும் சிம்பு, ஏதாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், புலி பதுங்குவது பாயுறதுக்குத்தான். சீக்கிரமே பாயுவேன் என்று அதிரடியாக டயலாக் விடுகிறாராம்.
அதற்கு, இப்படியெல்லாம் ஆவேசமாக பேசினால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விடுமா? என்று அபிமானிகள் சிம்புவிடம் கேட்டால், நான் நடித்து வரும் படங்கள் இப்போதைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாகவே இருக்கும். கணடிப்பாக அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்காது. அந்த நம்பிக்கையில்தான் இப்படி சொல்கிறேன். மேலும், நடித்து வரும் படங்களுக்குப்பிறகு நான் நடிக்கிற படங்கள் வருடத்திற்கு ஒன்றாவது கட்டாயம் வெளியாக வேண்டும் என்பதை மனதில் கொண்டே புதிய படங்களில் கமிட்டாவேன் என்றும் சொல்கிறாராம் சிம்பு.
Comments