மருத்துவத்துக்கான நோபல் பரிசு ; மூன்று பேருக்கு பகிர்ந்து வழங்கல்

ஸ்டாக்ஹோம்: மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் ஓ கீபி, மே பிரிட் மோசர் மற்றும் எட்வர்டு ஐ மோசர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

மூளை செல் இயக்கம் :


மூளையில் உள்ள செல்களின் இயக்கம் குறித்து இவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியில் சாதனை படைத்தமைக்காக இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஓ கீபிக்கு பரிசுத்தொகையில் பாதி அளிக்கப்படவுள்ளது. நார்வேயை சேர்ந்த தம்பதியினரான மே பிரிட் மோசர், எட்வர்டு ஐ மோசருக்கு மீதி பாதி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.அமைதிக்கான நோபல் பரிசு வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுகிறது.

Comments