சென்னை: நீதிமன்ற தீர்ப்பு குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்மீதுள்ள அன்பு காரணமாக
நீதிமன்ற தீர்ப்பு குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம். தீர்ப்பு வழங்கிய
நீதிபதி குறித்தும், நீதிமன்ற நடவடிக்கை குறித்தும் யாரும் விமர்சிக்க
வேண்டாம். நீதித்துறை புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எவ்வித
நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம். யார் மீதும் எவ்வித குற்றச்சாட்டையும்
சுமத்த வேண்டாம். யாரும் குறை கூற இடமளிக்காத வகையில் அமைதி காக்க
வேண்டும். சட்டம் ஒழுங்கினை செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும்.
மேல்முறையீட்டில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என கூறியுள்ளார்.
Comments