' கிளீன் இந்தியா ' நாளை துவக்கம் ; பிரதமருக்கு ஓய்வு இல்லை


புதுடில்லி: நாடு முழுவதும் தூய்மைபடுத்தும் திட்டமாக' கிளீன் இந்தியா ' திட்டம் நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். 5 நாள் அமெரிக்க பயணம் முடித்து இன்று நாடு திரும்பும் இவர் நாளை முதல் கிளீன் இந்தியா திட்டம் துவக்க விழா, நவராத்திரி விழா என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
இதில் ' மேக் இன் இந்தியா ' பெரும் வரவேற்பை பெற்றது. இ கவர்னன்ஸ் திட்டம், கங்கை தூய்மை திட்டம் என செயல்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இது போல் கிளீன் இந்தியா என்ற திட்டமும் நாளை முதல் துவக்கி வைகப்படுகிறது. இதற்கும் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெஜ்ரிவாலுக்கு பயம்: நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ள "தூய்மை இந்தியா' திட்டம், எங்களுடையது என்றும், தங்கள் திட்டத்தையே, பிரதமர் அமல்படுத்த இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பா.ஜ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கெஜ்ரிவாலுக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் இவ்வாறு தேவையில்லாமல் பேசுகிறார். அவருக்கு அவர் கட்சிக்கு இருக்கும் ஓட்டுவங்கி இழந்துவிடுவோமோ என்ற பயம் வந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கருத்து: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ள "தூய்மை திட்டம் ', நாளை முதல் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டம், மக்களிடையே, சுற்றுப்புற சூழ்நிலை குறித்த நல்ல ஒரு மாற்றத்தை நிச்சயம் கொண்டு வரும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

Comments