மனம் விட்டு...இதுகுறித்து, தமிழிசை
சவுந்தரராஜன் கூறியதாவது:
ரஜினி வீட்டில், ஆண்டுதோறும் கொலு பொம்மை வைத்து,
சிறப்பாக கொண்டாடுவர். இந்தாண்டு, கொலு நிகழ்ச்சிக்கு வருமாறு, என்னை,
ரஜினி குடும்பத்தினர் அழைத்திருந்தனர். அதற்காக சென்றிருந்தேன். அந்த
சமயத்தில் ரஜினி இல்லை. அதனால், அவர் குடும்பத்தினருடன் தான் இருக்க
முடிந்தது. ரஜினியின் மனைவி லதாவும், எனக்கு ரொம்பவும் நெருக்கமானவர். அவர்
என்னிடம், அரசியல் நிலவரங்கள் உட்பட, நாட்டின் நடக்கும் பல்வேறு
விஷயங்கள் குறித்தும், மனம் விட்டுப் பேசினார். ரஜினியின் குடும்பத்தினர்,
பிரதமர் மோடியின் மீது அளப்பறிய பாசம் கொண்டவர்கள். அவருடைய ஆட்சியின்
செயல்பாடுகள் குறித்து வெகுவாக பாராட்டினர்.
வலியுறுத்தல்
: மோடியின், 'தூய்மை இந்தியா' திட்டத்தையும், அந்த திட்டம் மக்களிடம்
வெகுவாக சென்றடைய வேண்டும் என்பதற்காக, மோடி எடுக்கும் நடவடிக்கைகளையும்
வியந்து பாராட்டினர். குறிப்பாக, அத்திட்டத்தில் பிரபலங்களை
ஈடுபடுத்துவது, திட்டம் பெரும் வெற்றியடையும் என்று சொன்னார்கள். அப்போது,
அந்த திட்டத்தில் ரஜினியும் தன்னை இணைத்து கொள்ள வேண்டும் என, அவர்களிடம்
நான் வலியுறுத்தினேன்.
மோடியின் திட்டங்களை பாராட்டி, அவருக்கு,
ரஜினி கடிதம் எழுதியிருப்பதையும், அப்போது தெரிவித்தனர். ஏற்கனவே, இந்திய
நதிகள் இணைக்கப்படும் விஷயம் உட்பட, நாடு மேம்பட வேண்டும் என்பதற்காக,
ரஜினி எடுத்த முயற்சிகள் குறித்தெல்லாம், அப்போது நினைவு கூறப்பட்டது. மோடி
குறித்து நான் எழுதிய புத்தகத்தையும், அவர்களிடம் நான் வழங்கினேன்.
பெரும்
வெற்றிடம்... : ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை
அனுபவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழகத்தில் அரசியலில் பெரும்
வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும்
சக்தி, தேசிய கட்சியான பா.ஜ.,வுக்கு தான் இருக்கிறது. அதையும் அவர்களிடம்
நான் தெரிவித்தேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரஜினி, பா.ஜ.,வை ஆதரித்து,
தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என்ற, என் எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன். இவ்வாறு, அவர் கூறினார்.
Comments