கறுப்பு பணம் பதுக்கிய பட்டியல் ; காங்., பொறுப்பாகாது: சிதம்பரம்


புதுடில்லி: வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் காங்கிரசார் பெயர் இருந்தால் இதற்கு காங்கிரஸ் பொறுப்பாக முடியாது என்றும், இது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தாது என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கிய நபர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்.
இதில் காங்., கட்சியின் முக்கிய புள்ளிகளின் பெயர் உள்ளது என்றார். இதற்கு பதில் அளித்து வரும் காங்கிரஸ் கட்சி, பிளாக் மணி வைத்து பிளாக்மெயில் பண்ண வேண்டாம் என்று ஜெட்லிக்கு பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் ஜெட்லி பேச்சு குறித்து ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் : காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் இல்லாதவர் ஒருவர் தலைவராகும் வாய்ப்புக்கள் உள்ளது. சோனியா, ராகுல் ஆகிய இருவரும் மீடியாக்கள் மற்றும் மக்கள் தொடர்பை அதிகரித்து கொள்ள வேண்டும். கறுப்பு பண பட்டியலில் காங்கிரஸ் காரர்கள் பெயர் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. யார் இடம் பெற்றுள்ளனர் என்றும் எனக்கு தெரியாது. அதே நேரத்தில் இந்த பட்டியலில் வருவோர், அவர்களது தனிப்பட்ட ஒழுக்க ரீதியானது. இதற்கு கட்சி பொறுப்பேற்க முடியாது. இது கட்சிக்கு அவப்பெயரையும் தராது. இது ஒன்றும் எங்களுக்கு ஆச்சரியமானதாக இருக்க போவதில்லை. இதனால் இது குறித்து நாங்கள் கவலைப்பட மாட்டோம் . நில கையகப்படுத்துதல் மசோதாவை எதிர்க்க மாட்டோம். ஜெட்லி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வத்ரா வழக்கு காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் மூடி மறைக்கப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இது போன்ற விஷயத்தில் பா.ஜ., தான் இரட்டை வேடம் போடுகிறது என்றும் காங்., தெரிவித்துள்ளது.

Comments