சமீபத்திய காஷ்மீர் மழை வெள்ளம் காரணமாக அந்த மாநிலமே பெரும் சேதத்தை சந்தித்தது. இதனால் இது போன்ற சேதத்தை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ராணுவத்தினர் தயார்: தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடலோர பகுதி மக்கள் ஒருலட்சத்திற்கும் மேலானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த புயலால் ஒடிசாவின் தென் கடலோர பகுதிகளும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.
இதற்கிடையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எடுக்கப்பட்டுள்ள மற்றும் எடுக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உயர் மட்ட அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.
Comments