
சென்னை: ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு
நடிகைகள் பாத்திமா பாபு, சரஸ்வதி, குயிலி, வாசுகி ஆகியோர் சென்றனர்.
சொத்துக்கு குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
அவரை சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிர்வாகிகள் என்று
ஏராளமானோர் தினமும் சிறைக்கு வருகிறார்கள். ஆனால் அவர் யாரையும் சந்திக்க
விரும்பாததால் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் பழனியப்பன், முக்கூர் சுப்பிரமணியன், சம்பத்,
ஜெயபால், நடிகைகள் பாத்திமா பாபு, சரஸ்வதி, குயிலி, வாசுகி, எம்.பி.க்கள்
அசோக்குமார், இளவரசரன், ஹரி, அருண்மொழித்தேவன் என பலர் ஜெயலலிதாவை சந்திக்க
சனிக்கிழமை பெங்களூர் சென்றனர்.
பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற அவர்களை சந்திக்க ஜெயலலிதா விரும்பவில்லை.
இதையடுத்து சிறை வாசலில் நின்றுவிட்டு திரும்பியுள்ளனர். ஜெயலலிதாவை
சந்திக்க வரும் தொண்டர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட புதிதில் அதிமுக தொண்டர்கள் சிறை வாசலிலேயே
இரவும், பகலும் காத்துக் கொண்டிருந்தனர்.
Comments