சிறையில் இருந்து வெளியேறினார் ஜெ.,: சென்னை வந்த ஜெ.,வுக்கு வரவேற்பு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலடைக்கப் பட்ட ஜெ., இன்று ஜாமினில் விடுதலை ஆனார். கோர்ட் உத்தரவு அளித்தபின்னர் அவர் முறைப்படி பரப்பர அக்ரஹார சிறையில இருந்து மதியம் 3 மணி 16 நிமிட நேரத்தில் வெளியேறினார். இவர் சிறை வளாகத்தில இருந்து கார் மூலம் 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள எச்.ஏ.எல்., விமான நிலையத்திற்கு 3. 58 மணிக்கு சென்றார்.
தொடர்ந்து இங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த தனி விமானம் மூலம் மாலை 4. 25க்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். மாலை 4.58 க்கு விமானம் சென்னை வந்து சேர்ந்தது. விமான நிலையம் அருகே கூடி நின்ற தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

ஜெ., சசிகலா, மற்றும் இளவரசி, ஒரே காரில் வந்தனர். இவர்களை படமெடுக்க பல்வேறு பத்திரிகையாளர்கள் ஜெயில் வளாகத்தில் காமிராக்களுடன் காந்திருந்தனர். மாலை 5. மணி 20 நிமிட அளவில் ஜெ., சென்னை வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று-7, இரண்டு செவ்வாய், ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும் சனிக்கிழமை, ஜாமினில் வெளியே வந்ததும் சனிக்கிழமை ஆகும். கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி ( சனிக்கிழமை ) சிறப்பு கோர்ட் ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கு சிறைத்தண்டனை அறிவித்தது.
இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கபட்டதும் சனி ! ஜாமினில் வெளியாவதும் இன்று சனிக்கிழமை ஆகும். இதில் 2 செவ்வாய்கள் உண்டு . இவர் ஜாமின் மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி ரத்தினகலா என்பவர் விசாரிக்க மறுத்தது செப்., 30 ( செவ்வாய்க்கிழமை), இது போல் ரெகுலர் நீதிபதி சந்திரசேகரா நிராகரித்ததும் அக். 7 ( செவ்வாய்க்கிழமை). இது போல் 7க்கும் ஒரு தொடர்பு இருப்பதை பார்க்கலாம். செப்., 27 ( சிறை சென்றது ), அக்.,7 (ஜாமின் மனு தள்ளுபடி) அக்.,17 ( ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி ) .
அ.தி.மு.க., கட்சியை சேர்ந்தவர்களே: ஜெ.,வுக்கு உத்திரவாதம் கொடுத்தவர்கள் பலரும் அ.தி.மு.க., கட்சியை சேர்ந்தவர்களே ஆவர். பொதுவாக யாராக இருந்தாலும் ஒருவர் ஜாமினில் வர சொந்த உறவுக்காரர்களே தனிநபர் ஜாமினுக்கு ஆவணங்கள் தாக்கல் செய்வர். இந்த ஜாமினில் ஒருவருக்கு 2 பேர் வீதம் 8 பேர் ஜாமின்தாரர்களாக இருக்க வேண்டும் . இன்றைக்கு ஜெ., வை பொறுத்தவரையில் அவரது கட்சிக்காரர்களே இந்த ஆவணங்களை தாக்கல் செய்தனர். ஜெ.,வுக்கு உத்திரவாதம் அளித்த 2 பேரில் பரத் என்பவர் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தின் தொழில் அதிபர் ஆவர். குணஜோதி என்ற பெண் கர்நாடக மாநில அ.தி.மு.க, செயலாளரான புகழேந்தியின் மனைவி ஆவார்.
இது போல் சசிகலாவுக்கு உத்திரவாதம் அளித்த ராஜீவ் கர்நாடக மாநில இணை செயலர் ஆவர். லட்சுமிபதி எஸ்.வி.சி.கே என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது போல் இளவரசிக்கு , உத்திரவாதம் அளித்தவர்கள் புகழேந்தி ( கர்நாடக மாநில அ.தி.மு.க,. செயலாளர் ) , ராஜேந்திரன் கர்நாடக மாநில பொருளாளர் ஆவார்.
சுதாகரனுக்கு லோகேஷ் இவர் லட்சுமிபதியின் மகன் ஆவார். அன்பாம்மாள் ,கர்நாடக மாநில இணை செயலரின் ராஜீவ் மனைவி ஆவார்.

Comments