புதுடில்லி: கறுப்பு பண பதுக்கல்காரர்களை அரசு காப்பாற்ற
முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் வருவதாக சுப்ரீம் கோர்ட் கேள்வி
எழுப்பியுள்ளது. நேற்று தொழிலதிபர்கள் பர்மன், லோகியா, ராதா திம்லு ஆகிய 3
பேர் பெயர் மட்டும் வெளியிட்டது ஏன் ? மற்ற பெயர்களை வெளியிட மத்திய அரசு
தயங்குவது ஏன் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கறுப்பு பண பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் பகிர்வதில் ஆட்சேபனை இல்லை என்றும், சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஏற்கனவே நாங்கள் பட்டியல் கொடுத்துள்ளோம். என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் நியாயமான முறையில் சட்டத்திற்குட்பட்டு, வரி சட்டத்திற்கு உட்பட்டு வெளிநாட்டில் பணம் போட்டவர்கள் பெயரை வெளியே தெரிவிக்க முடியாது, இது அவர்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும். என்றும் கூறினார்.
இன்றைய விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதிட்டார். வாதத்திற்கு பின்னர் , கறுப்புபண பதுக்கல்காரர்களின் அனைத்து பெயர்களையும் தாருங்கள். நாளைக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். சீலிடப்பட்ட கவரில் கூட தாக்கல் செய்யலாம் என்றும் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நடந்து வருவதாகவும், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இரட்டை வரி முறையினால் சில சட்டச்சிக்கல் இருப்பதாகவும், அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். கோர்ட்டில் தாக்கல் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றார்.
இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். தாங்கள் 2011 ல் போட்ட உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என்றும் கூறினர். அனைத்து பெயர் கொண்ட பட்டியலை நாளைக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
சிரமம் இல்லை ; ஜெட்லி; வெளிநாட்டு வங்கி கணக்காளர்களை கோர்ட்டில் சமர்பிப்போம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். கோர்ட் உத்தரவு வெளியான பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜெட்லி கூறுகையில், வெளிநாட்டு வங்கி கணக்காளர்கள் பெயரை சுப்ரீம் கோர்ட் முன்பு தெரிவிப்பதில் எங்களுக்கு எந்த சிரமும் இல்லை. கோர்ட்டில் தாக்கல் செய்வது எங்களின் கடமை ஆகும். உரிய நேரத்தில் தாக்கல் செய்வோம். அப்போது உண்மைகள் வெளி வரும் என்றார்.
காங்., வரவேற்பு : இன்றைய சுப்ரீம் கோர்ட் உத்தரவை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. அக்கட்சியின் பொதுசெயலர்களில் ஒருவராக அஜய்மக்கான் கூறுகையில். பா.ஜ., கட்சி கொடுத்த வாக்குறுதிகளை முழுமையா நிறைவேற்றட்டும். கோர்ட் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Comments