இந்த மனு குறித்தும் விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை
சிந்திக்க வேண்டும். எனவே வழக்கமான ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கட்டும்
என்றார். வக்கீல்கள் ஜெ., தரப்பு உடல் நிலை குறித்து எடுத்துரைத்தனர்.
இதனால் அவரை விடுவியுங்கள் என்றனர். ஆனால் நீதிபதி எதையும்
பொருட்படுத்தவில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த விவாதம் நடந்தது.
தொடர்ந்து நீதிபதி இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதற்கு வக்கீல்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல வக்கீல்களான ஜெத்மலானி, மற்றும்
டில்லி வக்கீல்கள் அதிர்ச்சியுற்றனர்.
கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து வக்கீல்கள் நிருபர்களிடம் பேசுகையில், 8 கோடி மக்களின் ஆதரவு பெற்றவரான ஜெ.,வுக்கு ஜாமின் தர மறுத்தது வஞ்சித்த செயல் ஆகும். இதனை ஜீரணிக்க முடியவில்லை. இது கண்டனத்திற்குரியது. நீதிபதி விசாரிக்க மறுத்தது , கோர்ட்டில் நீதி இல்லை, நியாயம் இல்லை. இது அவமதிப்பு ஆகும். சட்ட விரோதம். அநியாயம். அக்கிரமம். இது குறித்து நாங்கள் பார் அசோஷியேசனுக்கு தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஜனாதிபதிக்கும் மனு கொடுப்போம். இந்த விவகாரத்தில் கர்நாடக தலைமை நீதிபதி தலையிட்டு ஜெ., வை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு உணர்ச்சி பொங்கிட பேசினர்.
சிறை அருகே தொண்டர்கள் கண்ணீர்: ஜாமின் இன்று கிடைக்கவில்லை என்றதும் சிறை அருகே கூடியிருந்த ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர். பலர் சாலைகளில் விழுந்து புரண்டனர். ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வக்கீல்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தல் ; ஜெ., ஜாமின் மனுவை உடனே விசாரிக்கனும் என மீண்டும் 3 வது முறையாக ஜெ., வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். நேற்று ஜாமின் மனு விசாரிக்கப்பட்டபோது நீதிபதி முதலில் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஆனால் இது சரியல்ல, உடனே விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனையடுத்து இன்று காலையில் மீண்டும் நீதிபதி ரத்தினகலா முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ரெகுலர் கோர்ட் விசாரிக்கட்டும் என்றார். இதனையடுத்து மனு 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஆவேசமுற்ற வக்கீல்கள் பதிவாளரை மீண்டும் சந்தித்து, இன்று மதியமே வேறு நீதிபதியை வைத்து விசாரிக்க வேண்டும் என்றனர். ஆனால் பதிவாளர் இதனை ஏற்க மறுத்து விட்டார். இதனையடுத்து நீதிபதி மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெற்றனர். பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும், ஜாமின் எடுக்கும் முயற்சி பலிக்கவில்லை. இதனால் பெங்களூரு சென்ற வக்கீல்கள், அமைச்சர்கள் பலரும் சோகத்துடன் சென்னை திரும்ப துவங்கியுள்ளனர்.

Comments