இஸ்லாமாபாத்: காஷ்மீர் ஒரு சட்ட பிரச்சினை மற்றும் அதன் சட்ட நிலையை
பொது வாக்கெடுப்பு மூலம் தீர்க்கப்பட வேண்டும் என பாகிஸ்தான்
வெளியுறவுத்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் தஸ்நிம் அஸ்லாம்
கூறியுள்ளார். இதன் மூலம் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
என பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.
சட்ட பிரச்னை:
இது தொடர்பாக, இஸ்லாமாபாத்தில் வாராந்திர கூட்டத்தில் நேற்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் தஸ்நிம் அஸ்லாம் கூறுகையில்,-காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி பொதுவாக்கெடுப்பு நடத்தியே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். காஷ்மீர் விவகாரம் ஒரு சட்டப்பிரச்னை. பொது வாக்கெடுப்பை வலியுறுத்தும் காஷ்மீர் மீதான ஐ.நா. தீர்மானத்திற்கு இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஒரு மாற்றுத்தீர்வாக இருக்காது. இந்தியாவுடன் போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தினால் ஐ.நா. தீர்மானத்தை செயலிழக்க வைத்துவிட முடியாது. பாகிஸ்தான் உயர் கமிஷனர் அப்துல் பாசித் ஷரியத் தலைவர்களை சந்தித்தில் எந்த தவறும் இல்லை. பாகிஸ்தான் எப்போதுமே அவர்களிடம் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
Comments