எல்லையில் பாக்.அத்துமீறல்

புதுடில்லி : இந்திய எல்லைப்பகுதியான காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக்கோடு அருகே, பாகிஸ்தான் படையினர், இந்திய படையினர் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு, இந்திய படை தரப்பில் தக்க பதிலடி அளிக்கப்பட்டது. புதன்கிழமை மாலை 06.40 அளவில் இந்த துப்பாக்கிச்சூடு துவங்கியதாகவும், சிலமணிநேரம் இந்த தாக்குதல் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருநாடுகளுக்கிடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையிலும், பாகிஸ்தான் அவ்வப்போது எல்லைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments