ஆளும்கட்சி தூண்டுதலால் போராட்டம்: கருணாநிதி

சென்னை: ஆளும்கட்சி தூண்டுதலால் தமிழகத்தில் தினசரி போராட்டம் நடைபெற்று வருவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில், போலீசாரின் அனுமதி பெறாமல் தினமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி தூண்டுதலால் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கல்வி நிறுவனங்களும் போராட்டம் அறிவித்திருப்பது, கல்வித்துறையில் அரசியல் தலையீட்டிற்கான ஆதாரமாகும். மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில் கல்வி நிலையங்கள் நாளை இயங்காது என அறிவித்திருப்பதை மாணவர்களும் பெற்றோர்களும்விரும்பவில்லை என கூறியுள்ளார்.

Comments