ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமின் மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞர் இல்லாததால், வழக்கை விசாரிக்க இயலாது என்று கூறி, அக்., 6ம் தேதிக்கு, மனு மீதான விசாரணையை நீதிபதி ரத்னகலா கூறினார்.
சந்தர்ப்பம் தேவை:
இதுகுறித்து சட்டத்துறை வல்லுனர்கள் கூறியதாவது:'ஆயுள் தண்டனை அல்லது, 10
ஆண்டுகளுக்கு அதிகமாக சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின், ஜாமின் மனுவை
விசாரிக்கும் போது, அரசு வழக்கறிஞர் பதிலளிக்க சந்தர்ப்பம் அளிக்க
வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் சந்தர்ப்பம்
வழங்கியும், எழுத்துப்பூர்வமான ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால்,
குற்றத்தின் கடுமை, தன்மை, வயது, குற்றப் பின்னணி, நீதிமன்றத்தின் மீதான
மக்கள் நம்பிக்கையின் விளைவு ஆகியவற்றை, ஜாமினில் விடுவிப்பதற்கு முன்,
நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த
உத்தரவு, 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு தான்
பொருந்தும்; அதற்கு கீழ் தண்டனை பெற்றவருக்கு பொருந்தாது.எனவே அரசு
வழக்கறிஞருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டியது இல்லை.
நோட்டீஸ்:
பொதுவாக,
10 ஆண்டுகளுக்கு கீழ், தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்து,
'அப்பீல்' மனுத் தாக்கல் செய்யும் போது, அந்த நபரை, ஜாமினில் விடுவிப்பது
சகஜம் தான்.இதற்காக அரசு வழக்கறிஞருக்கு, 'நோட்டீஸ்' கொடுக்க
வேண்டியதில்லை; அது நீதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது. உதாரணத்துக்கு,
முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு, கலர் 'டிவி' வழக்கில், ஐந்து ஆண்டு சிறை
தண்டனையை, தனி நீதிமன்றம் விதித்தது. இதை எதிர்த்து, 'அப்பீல்' செய்த மனு,
விசாரணைக்கு வந்த போது, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து,
சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது என, சுட்டிக்
காட்டப்படுகிறது.அதேபோல், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான
வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின்
வழங்குவதில், எந்த சிக்கலும் இருக்காது.இவ்வாறு, சட்டத்துறை வட்டாரங்கள்
கூறுகின்றன.
Comments