யார் ? யார் உத்ரவாதம்: இன்று காலை 11 மணிக்கு நீதிபதி குன்கா கோர்ட்டுக்கு வந்தார். ஆவணங்களை பரிசீலித்த நீதிபதி உத்தரவாதம் அளிக்கிறீர்களா? கோர்ட் கூறியபடி மீறினாலோ, குற்றவாளி வேறு எங்கும் ஓடினாலோ உங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாமா என்றும் கேள்வி கேட்டார். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளியேற நீதிபதி உத்தரவிட்டார்.
ஜெ.,வுக்கு பரத், குணஜோதி புகழேந்தி என்ற இருவர் தனிநபர் உத்தரவாதம் அளித்தனர். இதில் பரத் தனது ரூ. 5 கோடிக்கான சொத்தையும், குணஜோதி புகழேந்தி ரூ.1 கோடி சொத்து இருப்பதாகவும் கோர்ட்டில் தங்கள் சொத்துக்கள் ஆவணங்களை ஒப்படைத்தனர். இது போல் சசிகலாவுக்கு ராஜீவ், லட்சுமிபதி ஆகிய இருவரும், இளவரசிக்கு, புகழேந்தி, ராஜேந்திரன் என்ற இருவரும், சுதாகரனுக்கு லோகேஷ், அன்பாம்பாள் ஆகிய இருவரும் கோர்ட்டில் தனிநபர் உத்தரவாதம் அளித்தனர். தொடர்ந்து இந்த உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து இன்னும் சில மணி நேரத்தில் பெங்களூரு சிறையில் இருந்து ஜெ., வெளியேறுவார் என தெரிகிறது.
இதற்கிடையில் பாதுகாப்பு கருதி தமிழக பதிவு வாகனங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறை வெளியே தொண்டர்கள் பலர் கூடி நிற்கின்றனர்.
Comments