லோக்சபா
தேர்தல் : கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பல முனை போட்டி நிலவியது.
அனைத்து கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடிவு
செய்திருப்பதாக, தகவல் வெளியானது. இதைத் தவிர்க்க, தேர்தலுக்கு முந்தைய
நாள், மாநிலம் முழுவதும், முதன் முறையாக, 144 தடையுத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. இது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்ததாக
எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். பிரவீன்குமார், ஆளுங்கட்சிக்கு
ஆதரவாக, தடையுத்தரவை பிறப்பித்ததாக புகார் கூறினர். ஆனால், தேர்தல் கமிஷன்
உத்தரவு படி செயல்பட்டதாக பிரவீன்குமார் தெரிவித்தார். அதை
எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை; தேர்தல் கமிஷனுக்கு, புகார் மனு
அனுப்பின. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார், பதவியில் நீடிக்க
விரும்பவில்லை என, தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்தார். எனவே, புதிய
தலைமை தேர்தல் அதிகாரியை தேர்வு செய்யும் பணியை, தேர்தல் கமிஷன் துவக்கியது.அதிகாரப்பூர்வமாக
தமிழக அரசு பரிந்துரையை ஏற்று, வேளாண் துறை முதன்மை செயலராக உள்ள, சந்தீப்
சக்சேனாவை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்க, தேர்தல் கமிஷன்
ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில், நேற்று, தமிழக அரசு சார்பில்
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்துடன், சந்தீப் சக்சேனா, வேறு எந்த
பதவியையும், கூடுதலாக கவனிக்க மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரவீன்குமாருக்கு, புதிய பணியிடம் அறிவிக்கப்படவில்லை.
சந்தீப் சக்சேனா பயோடேட்டா
சந்தீப்
சக்சேனா, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.எம்.டெக்., பட்டதாரி.
1989ல், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார்.கடந்த, 1990ல், சேலம் மாவட்டத்தில்,
உதவி கலெக்டராக பணியை துவக்கினார்.அதன்பின், கூடுதல் கலெக்டராக, கோவை,
திண்டுக்கல் மாவட்டங்களிலும்; கலெக்டராக, கடலுார் மாவட்டத்திலும் பணியாற்றி
உள்ளார். தற்போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு முன்,
இப்பதவியில், 21 பேர் இருந்துள்ளனர்.
Comments