செவ்வாய் கிரகத்தில்தெரியும் புழுதி புயல்

பெங்களூரு : சிவப்பு கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் புழுதிப் புயல் வீசுவதை, இந்தியாவின் மங்கள்யான் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனின் (மாம்) கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, மங்கள்யானின் முக்கிய நோக்கம், உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான மீத்தேன் வாயுவை கண்டறிவது தான்.முதல் புகைப்படத்தை அனுப்பிய நிலையில், தற்போது, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து, இந்த புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

Comments