தீபாவளியால் காற்று மாசு ஆனது ; சென்னை- ஆமதாபாத் எக்கச்சக்கம்

சென்னை: முடிந்த போன தீபாவளியால் நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்று அதிகபட்சமாக மாசு அடைந்து போய் இருக்கிறது. இந்த மாசு இன்னும் 2 நாட்கள் காற்றில் கலந்து இருக்கும். அவ்வாறு அசுத்தம் பெற்ற நகரங்கள் பட்டியலில் ஆமதாபாத் முதலிடத்திலும், சென்னை 2 வது இடத்திலும் அங்கம் பெற்றுள்ளது.


கடந்த 22 ம்தேதி ஆண்டுதோறும் கொண்டாடும் தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி முடித்துள்ளனர். ஆந்திராவில் நடந்த பட்டாசு ஆலை விபத்தை தவிர்த்து பொதுவாக விபத்தில்லாத தீபாவளியாக இந்தாண்டு தீபாவளி முடிந்துள்ளது. ஆந்திராவில் மட்டும் ஒரே ஒரு விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர். பட்டாசு போடுவதிலும் பெரும் விபத்துக்கள் இல்லாமல் நிம்மதியாக முடிந்துள்ளது.
ஆனாலும் நம்மை அறியாமல், நமக்கு வெளிப்படையாக தெரியாமல் நமது மக்கள் காற்றை மாசு படிய செய்துள்ளனர். இதன்மூலம் பல ஒவ்வாமை நோய்கள் பலருக்கு தொந்தரவை தந்துள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வரியம், தீபாவளி கொண்டாட்டத்தால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு அளவுகளை அறியும் ஆய்வுகளை, நடத்தியது.
நைட்ரஜன் டை ஆக்சைடு : சென்னை , மதுரை, சேலம், கோவை, திருச்சி, கடலூர், நெல்லை, ஓசூர், திருப்பூர், வேலூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தீபாவளிக்கு முன், அக்., 15ம் தேதியும், தீபாவளியான, 22ம் தேதியும் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், காற்றில் மிதக்கும் நுண் துகள்கள், கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு, ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும், அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில், காற்றில் மிதக்கும் நுண்துகள்கள், 15ம் தேதி ஆய்வில், 37 மைக்ரோ கிராமாக இருந்தது, 22ம் தேதி ஆய்வில், 297 ஆக உயர்ந்துள்ளது. கந்தக டை ஆக்சைடு, 12லிருந்து, 32 ஆகவும், நைட்ரஜன் டை ஆக்சைடு, 13லிருந்து 20 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்துள்ளது.
சேலம், சாரதா மந்திர் மெட்ரிக் பள்ளி பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், காற்றில் மிதக்கும் மின் துகள்கள், 30லிருந்து, 168; சேலம் சிவா டவரில், 47லிருந்து, 197 மைக்ரோ கிராமாகவும் அதிகரித்து காணப்படுகிறது. டில்லியில் நடத்திய ஆய்வில், 1 கியூபிக் மீட்டர் காற்றில் 210 மைக்ரோகிராம் நைட்ரஜன் டை ஆக்ஸைடும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சல்பர் டை ஆக்ஸைடு அதிக பட்சமாக 503 மைக்ரோ கிராமாகவும், சென்னையில் 393 மைக்ரோ கிராமாகவும், இருந்தது.

இது குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய எக்ஸ்கியூடிவ் டைரக்டர் அனுமித்தா ராய்சவுத்திரி கூறுகையில், கடந்த 2 நாட்களாக காற்றில் மிகுந்த மாசு கலந்திருப்பதை பார்க்க முடிந்தது. தட்ப வெப்ப சூழல் குளிராக இருந்ததால் காற்று ஏதுமில்லை. இதனால் இந்த காற்றில் கலந்த புகை மாசுக்கள் எளிதில் கடந்து செல்ல முடியாமல் இருந்தது. இந்த மாசுக்கள் காற்றில் இன்னும் இரண்டு நாட்கள் கலந்து தான் இருக்கும். தற்போதைய காற்று மாசு எங்களுக்கு கவலை தருகிறது என்றார்.

Comments