ஜெ., வை வரவேற்க மனித சங்கிலி

சென்னை: பெங்களூரு சிறையிலிருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்பதற்காக, சென்னையில் மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 21 நாட்களாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் நேற்று ஜாமின் வழங்கியது.
இதையடுத்து அவர் இன்று மாலை 3.20 மணிளவில் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவருடன் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் வெளியே வந்தனர். இந்நிலையில், சிறையிலிருந்து பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையம் சென்ற ஜெ., அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இதனிடையே 21 நாட்களுக்குப்பிறகு சென்னை வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்பதற்காக, அ.தி.மு.க., தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை போயஸ் கார்டன் வீடு முன்பாக பெருமளவில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து அவர் போயஸ் கார்டன் வீட்டுக்கு செல்கிறார். இதையடுத்து, விமான நிலையம் முதல் போயஸ் கார்டன் வீடு வரை மனித சங்கிலி வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போயஸ் கார்டன் வீடு முன் குத்தாட்டம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வீடு முன்பாக நடிகர், நடிகைகள் குத்தாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments