விசாகப்பட்டனம்: விசாகபட்டனம், ஸ்ரீகாகுளம் அருகே ஹுட்ஹுட் புயல் கரையை
கடந்தது. மணிக்கு 195 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், விசாகபட்டனம்
பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. பல வீடுகளில் மேல்கூரைகள்
சேதமடைந்தன. சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட விளம்பர
போர்டுகள் சாய்ந்தன. மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்னும் சில
மணி நேரங்களில் பாதிப்பு குறித்த தகவல்கள் வௌியிடப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
Comments