ஜெ.,வை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது: விஜயகாந்த்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். பக்ரீத் விழாவை முன்னிட்டு கட்சி தலைமையகத்தில் நடந்த விழாவில் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்த ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றக்கூடாது. சகாயம் குழுவை செயல்படுத்த தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.மேலும் அவர், இனி கொடநாட்டில் ஜெ, தங்க முடியா நிலை ஏற்பட்டுள்ளது. மிரட்டியும், பணம் கொடுத்தும் தமிழகம் முழுவதும் ஜெ.,க்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்படுகிறது. முல்லைப்பெரியாறு, காவிரி வழக்குகளில் தீர்ப்பின் போது ஜெ.,க்கு பாராட்டு விழா நடந்தது. தற்போது பாதகமான தீர்ப்பு வரும்போது, நீதிபதியை விமர்சனம் செய்கின்றனர் என கூறினார்.

Comments