ரஷ்யாவில் 750 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

மாஸ்கோ : ரஷ்யாவின் வோல்கா நதிக்கரையில் நடந்த அகழ்வாராய்ச்சியில், 750 ஆண்டுகளுக்கு முந்தைய நகரின் இடிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
உகேக் என்னும் இந்த நகரை, செங்கிஸ்கானின் வாரிசுகள் அமைத்துள்ளனர். இந்த இடிபாடுகளில், கண்டுபிடிக்கப்பட்ட, இரண்டு தேவாலயங்களில், கற்கள் மற்றும் மண்ணாலான அழகிய கை வேலைப்பாடுகளும், சிற்பங்கள் காணப்படுகின்றன.


இதுகுறித்து, 'லைப் சயின்ஸ்' பத்திரிகையில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது: செங்கிஸ்கானின் மரணத்திற்குப் பின், அவரது பேரன் பாது கான் பதவியேற்றார். அவரது காலத்தில், இப்பகுதி, மங்கோலிய அரசின் கீழ், 'கோல்டன் ஹோர்டு' சிற்றரசாக கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மத்திய ஆசியா வரை பரவியிருந்தது. செங்கிஸ்கானின் மரணத்திற்குப் பின், பல ஆண்டுகளுக்குப் பின், 1227ம் ஆண்டு, இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
வோல்கா நதிக்கரையில் அமைந்துள்ள, பண்டைய கோடைகால மாளிகைக்கு அருகில், சராதோவ் பிராந்திய அருங்காட்சியகத்தை சேர்ந்த தொல்லியல் நிபுணர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர். தேவாலயத்தின் பாதாள அறையில், மாதுளையின் உடைந்த பகுதியைக் கொண்ட கண்ணாடியாலான கொண்டை ஊசியும், டிராகன் எலும்பினாலான தட்டின் உடைந்த பகுதியும், கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த தேவாலயங்களில் ஒன்று 1280ம் ஆண்டில் துவங்கி 14ம் நூற்றாண்டின் துவக்கத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Comments