புதுடில்லி: ஏ.டி.எம்., ஐ மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால்
கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னை,
பெங்களூரு உள்ளிட்ட 6 நகரங்களில் நாளை முதல் இது
அமல்படுத்தப்படுகிறது.கணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு
மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்.
வங்கிக்கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும்,
பிற வங்கி ஏ.டி.எம்.,களில் 3 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
Comments