புதுடில்லி: இலங்கையில் தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களும் நிச்சயம் மீட்கப்படுவார்கள் என இந்திய
வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்
செய்தி தொடர்பாளர் அக்பரூதீன் கூறுகையில், மீனவர்களை காப்பதற்கான சட்ட
நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.சட்ட நடவடிக்கை முடிந்த பிறகு மேல்
முறையீடு செய்யப்படும். மேல்முறையீடு செய்வது தொடர்பாக வழக்கறிஞர்களுடன்
இந்திய தூதர் ஆலோசனை நடத்தியுள்ளார். தீர்ப்பு நகல் கிடைத்ததும்
மேல்முறையீடு செய்யப்படும். இந்தியாவின் கவலை, டில்லியில் உள்ள இலங்கை
தூதரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலையும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை
அமைச்சகத்திடம் மீனவர்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை
அனைத்தும் சட்டரீதியாகமேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், ராஜீய ரீதியாகவும்
மீனவர்களை மீட்க மயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 1990ம் ஆண்டில் 2
இந்தியர்களின் தூக்கு தண்டனையை இலங்கை அரசு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.
5 மீனவர்கள் நிச்சயம் மீட்கப்படுவார்கள் என கூறினார்.
Comments