எல்லையில் வாலாட்டும் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை: 5 பேரை கொன்று 29 பேரை காயப்படுத்தியதால் கோபம்
இது தொடர்பாக, எல்லைப் பாதுகாப்புப் படையின் தகவல் தொடர்பாளர் கூறியதாவது:
இருதரப்பிலும் சண்டை:
உடன்,
எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பதிலடி கொடுத்தனர். இதையடுத்து,
இருதரப்பிலும் இடைவிடாது சண்டை தொடர்ந்தது. இந்தச் சண்டையில், எல்லைப்
பகுதியை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த, ஐந்து பேர் பலியாயினர்; 29 பேர்
காயம் அடைந்தனர்.அத்துடன், நேற்று காலை, 8:30 மணியளவில், பூஞ்ச் மாவட்டம்,
பிம்பர் காலி பகுதி யில் உள்ள பாதுகாப்புப் படையினரின் நிலைகளை நோக்கியும்,
சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மூலம், பாக்.,
படையினர் தாக்குதலை நடத்தினர். பாக்., படையினர் தாக்குதலில்
காயமடைந்தவர்கள், ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளனர்.இவ்வாறு, எல்லைப் பாதுகாப்புப் படை தகவல் தொடர்பாளர் கூறினார்.
இதையடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்படும், இதுபோன்ற தாக்குதல்களுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பாகிஸ்தானை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்படும், இதுபோன்ற தாக்குதல்களுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பாகிஸ்தானை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நிலைமை மாறிவிட்டது:
மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் இதுபற்றி கூறுகையில், ''போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு, பாக்., ராணுவம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவில் நிலைமை மாறிவிட்டது என்பதை, அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
கடந்த 3ம் தேதியும், ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில், பாக்., படையினர், இதே போல் தாக்குதல் நடத்தியதில், சிறுமி ஒருத்தி பலியானதோடு, ஆறு பேர் காயம் அடைந்தனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., படையினர், 12க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்தத் தாக்குதலில், ஏராளமான வீடுகள் சேதம் அடைந்ததோடு, கால்நடைகளும் பலியாகி உள்ளன. அதேநேரத்தில், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் தரப்பில், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
மக்கள் மிகுந்த பீதி:
பாக்.,
படையினர் நடத்தி வரும் இந்தத் தாக்குதலால், எல்லையில் வசிக்கும் மக்கள்,
மிகுந்த பீதி அடைந்து உள்ளனர். பாக்., படையினரின் குண்டுகளால், எந்த
நேரத்திலும், தங்களின் உயிர் போகலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.ஜம்மு -
காஷ்மீர் மாநிலத் தில், அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்தத் தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ள, பாகிஸ்தானில் இருந்து
செயல்படும், பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள், ஏராளமான பயங்கரவாதிகளை,
இந்திய பகுதிக்குள் ஊடுருவச் செய்ய முற்பட்டு உள்ளனர்.
திசை திருப்ப...:
அவர்களுக்கு
சாதகமாகவே, இந்தியப் பாதுகாப்புப் படையினரின் கவனத்தை திசை திருப்பும்
வகையில், பாக்., படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாக, ராணுவ
வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இதற்கிடையில், பாக்., தரப்பில்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியப் படையினர் நடத்திய
தாக்குதலில், தங்கள் நாட்டைச் சேர்ந்த, நான்கு அப்பாவிகள் பலியாகி
விட்டதாகவும், மூன்று பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
தக்க பதிலடி தரப்படும்:
''போர்
நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., படையினர் தாக்குதல் நடத்துவது சரியல்ல.
ஆனாலும், அந்தத் தாக்குதலை சமாளிக்க, இந்திய ராணுவத்தினரும், பாதுகாப்புப்
படையினரும் தயாராக உள்ளனர். அவர்கள், தக்க பதிலடி கொடுப்பர்,'' என, ராணுவ
அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது:பாக்., ராணுவத்தினரின் இதுபோன்ற அடாவடி செயல்களால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள், சீரடைய வாய்ப்பு இல்லை. இதை, அந்நாட்டு அரசு உணர வேண்டும். கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியிலும், சர்வதேச எல்லைப் பகுதியிலும், பதற்றத்தை உருவாக்க பாக்., முற்படுகிறது.மேலும், இரு நாடுகளுக்கு இடையே, பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கவும் தவறி விட்டது.இவ்வாறு, அருண் ஜெட்லி கூறினார்.
பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை:
ஜம்மு
- காஷ்மீர் மாநிலம், வடக்கு காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை
ஒட்டிய, தாங்தர் பகுதியில், பயங்கரவாதிகள் மூன்று பேரை, ராணுவத்தினர்
சுட்டுக் கொன்றனர்.பாக்., பகுதியில் இருந்து, இந்திய பகுதிக்குள் ஊடுருவ
முயன்ற அவர்களை, இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்த முற்பட்ட போது,
இருதரப்பினருக்கும் இடையே சண்டை நிகழ்ந்தது. இந்தச் சண்டையில், மூன்று
பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி
முறியடிக்கப்பட்டது.
இனிப்புகள் பரிமாற்றம் இல்லை:
பஞ்சாப்
மாநிலத்தில் உள்ள, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில்,
ஒவ்வொரு ஆண்டும், பக்ரீத் பண்டிகையின் போது, இரு நாட்டு ராணுவ வீரர்களும்,
இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். நல்லெண்ண அடிப்படையில், பல
ஆண்டுகளாக இது தொடர்ந்தது.ஆனால், ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில்,
பாக்., படையினர் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், பதற்றம் உருவாகி
உள்ளதால், வாகாவில், இனிப்புகளை பரிமாறிக் கொள்வது நிகழவில்லை என, ராணுவ
வட்டாரங்கள் தெரிவித்தன. இரு நாடுகளுக்கும் இடையே, வாகா எல்லையில் உள்ள
கதவும், நேற்று மூடப்பட்டிருந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது, துரதிருஷ்டவசமானது. இருப்பினும், எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் தாக்குதலை பார்த்துக் கொண்டு, மத்திய அரசு அமைதியாக இருப்பது, ஏன் என்பது தெரியவில்லை.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது, துரதிருஷ்டவசமானது. இருப்பினும், எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் தாக்குதலை பார்த்துக் கொண்டு, மத்திய அரசு அமைதியாக இருப்பது, ஏன் என்பது தெரியவில்லை.
குலாம்நபி ஆசாத்
காங்., மூத்த தலைவர்
பாக்., படையினரின் தாக்குதல், மோசமான பிரச்னையாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை, அவர்கள் தவிர்க்க வேண்டும். ஒப்பந்த விதிமுறைகளை மீறி, பாக்., தாக்குதல் நடத்தி வருவது, அந்நாட்டிற்கு நல்லதல்ல.
முக்தர் அப்பாஸ் நக்வி
பா.ஜ., மூத்த தலைவர்
காங்., மூத்த தலைவர்
பாக்., படையினரின் தாக்குதல், மோசமான பிரச்னையாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை, அவர்கள் தவிர்க்க வேண்டும். ஒப்பந்த விதிமுறைகளை மீறி, பாக்., தாக்குதல் நடத்தி வருவது, அந்நாட்டிற்கு நல்லதல்ல.
முக்தர் அப்பாஸ் நக்வி
பா.ஜ., மூத்த தலைவர்
Comments