சண்டிகர்: அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பீடாகடைக்காரர் ஒருவருக்கு
ரூ. 132 கோடிக்கு கரண்ட் பில் வந்துள்ளது. அரியானா மாநிலம் சோனிபட்
மாவட்டத்திலுள்ள கோஹானா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அப்பகுதியில் பீடா
கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இம்மாத கரண்ட் பில்லாக ரூ. 132 கோடி
வந்துள்ளது கண்டு ராஜேஷ் அதிர்ச்சியடைந்தார். அவர் கூறுகையில், வழக்கமாக
ரூ. 900க்குள் தான் கரண்ட் பில் வரும். ரூ. 132 கோடிக்கு பில் வந்தது கண்டு
அதிர்ச்சியடைந்தேன் என்று தெரிவித்தார். இதுகுறித்து சோனிபட் மின்வாரிய
அதிகாரி ஒருவர் கூறுகையில், கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு
பில் வந்திருக்கலாம். அவர் திருத்தம் செய்யப்பட்ட பில்லுக்கான தொகையை
மட்டும் கட்டினால் போதும் என்று கூறினார்.
Comments