சண்டிகர்: அரியானா மாநிலத்தில் 125 அடி நீள சுரங்கம் தோண்டி வங்கியில் நகை,
பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அரியானா மாநிலம்
சோனாபட் மாவட்டத்திலுள்ள கோகானா பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள்
புகுந்த கொள்ளையர்கள் அங்கு 77 லாக்கர்களில் இருந்த நகை மற்றும் பணத்தை
கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என
கூறப்படுகிறது. கொள்ளை சம்பவத்திற்காக கொள்ளையர்கள் 125 அடி நீளத்திற்கு
சுரங்கம் தோண்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments