இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி11 கோடி டன்னாக அதிகரிப்பு

புதுடில்லி : மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, நாட்டின் நிலக்கரி இறக்குமதி, நடப்பு 2014–15ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்.,–செப்.,), 18.47 சதவீதம் உயர்ந்து, 11.01 கோடி டன்னாக எகிறியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 9.29 கோடி டன்னாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், ‘ஸ்டீம்’ நிலக்கரி இறக்குமதி, 20.69 சதவீதம் அதிகரித்து, 7.21 கோடி டன்னிலிருந்து, 8.71 கோடி டன்னாக உயர்ந்து உள்ளது.
இதே போன்று, பெட்ரோலிய நிலக்கரி இறக்குமதியும், 72.22 சதவீதம் வளர்ச்சியடைந்து, 12.60 லட்சம் டன்னிலிருந்து, 21.70 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மேலும், கோக்கிங் கோல் எனப்படும் சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதியும், 7.13 சதவீதம் அதிகரித்து, 1.71 கோடி டன்னிலிருந்து, 1.83 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது.குறிப்பாக, சென்ற செப்டம்பரில் மட்டும், அனைத்து வகை நிலக்கரி இறக்குமதி, 19.26 சதவீதம் உயர்ந்து, 1.34 கோடி டன்னிலிருந்து, 1.60 டன்னாக எகிறியுள்ளது.

Comments