"ஸ்கைப்' என்ற வசதி மூலம் இணையத்தின் வழியாக உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கு வாடிக்கையாளர்கள் இலவசமாகத் தொடர்பு கொண்டு பேச முடியும்.
வருமானம் பாதிப்பு:
அதேநேரத்தில், ஸ்கைப் சேவையினால் தங்களது வருவாய் பெருமளவு பாதிக்கப்படுவதாக இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டின. இந்த நிலையில், ஸ்கைப்'பின் தாய் நிறுவனமான மைக்ரோசாப்ட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
உள்ளூர் வசதி கட்:
நவம்பர் 10 ஆம் தேதியுடன் ஸ்கைப் வசதி மூலம் இந்தியாவில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகள் இடையேயான உள்ளூர் அழைப்பு வசதி ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ளசெல்போன்கள், தொலைபேசிகளுக்கும் ஸ்கைப் வசதி மூலம் இலவசமாகப் பேசிக்கொள்ளும் வசதி தொடர்ந்து நீடிக்கும்.
மேலும், ஸ்கைப் மூலமான வை-பை, குறுஞ்செய்தி வசதிகளை இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசாப்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாய்ஸ் அழைப்புகளை இனி அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ் அப்., அறிவித்துள்ளது.
Comments