ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக
மேற்கொள்ளப்படும் போர் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை
என இந்திய பிரதிநிதி அறிவித்துள்ளார்.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக உள்ளக ரீதியான விசாரணைகளே நடத்தப்பட
வேண்டும் என்றும், அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும்
இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில்
புதிய ஆணையாளர் செயட் அல் ஹூசெய்ன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய
பிரதிநிதி கோரியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments