கோபாலபுரத்தில் தி.மு.க.வினர் உற்சாகம்

சென்னை:ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், காலை முதலே சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டின் முன் அக்கட்சியின் தொண்டர்கள் கூடினர். இந்நிலையில், இந்த வழக்கில் ஜெ., குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும், கருணாநிதி வீட்டின் முன் கூடியிருந்த தி.மு.க., தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Comments