சினிமா பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் நடிகர் விஷால். சினிமாவில் பெரிய
டைரக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் நடிகர் அர்ஜூன் இயக்கிய படங்களில்
உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆனால், ஒருகட்டத்தில் அவரது வீட்டுக்கு
சென்ற சில சினிமா பிரபலங்கள் உங்கள் வீட்டிலேயே ஒரு ஹீரோ இருக்கிறாரே
என்று விஷாலின் குடும்பத்தினருக்கு ஆசையை ஏற்படுத்த, அவர்களது சொந்த
பேனரிலேயே செல்லமே படம் மூலம் விஷாலை ஹீரோவாக்கி விட்டனர்.
அதையடுத்து,
ஒரு குணசித்ர நடிகருடன் சேர்ந்து கொண்டு நடிகர் சங்கத்தை கைப்பற்ற விஷால்
முயற்சி எடுப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில, நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் விஷாலை தங்கள்
கட்சிக்கு இழுக்க முயற்சி எடுத்ததாக அப்போது பேசப்பட்டது. ஆனால், கடந்த ஒரு
வாரமாக, திமுகவில் இருந்து விஷாலுக்கு அழைப்பு வந்திருப்பதாக இன்னொரு
செய்தி வெளியானது.
ஆனால் இதுபற்றி விஷால்
கூறியுள்ள செய்தியில். எனக்கு அரசியல் அறிவு சுத்தமாக கிடையாது..
மற்றவர்களைப் போன்று பேப்பர் படித்து அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்ளும்
சராசரி மனிதன்தான் நான். மேலும், இதுவரை எந்த கட்சியும் என்னை தங்கள்
கட்சியில் சேருமாறு அழைத்ததுகூட இல்லை. இந்த நிலையில, எனக்கு பல கட்சிகள்
அழைப்பு விடுப்பதாக செய்தி வெளியாவது ஆச்சர்யமாக உள்ளது என்று சொல்லும
விஷால், நான் எப்போதுமே முழுநேர நடிகன்தான். எந்த காலத்திலும் நான்
அரசியலுக்கு வருவதற்கான சாத்தியமே இல்லை என்று தன்னைப்பற்றி வெளியான
அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Comments